இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |


கீழே உள்ள உருப்படத்தைச் சொடுக்கினால் அதற்கான அதிகாரவிளக்கப் பக்கத்துள் செல்லலாம்.

அறம் பொருள் காமம்
001கடவுள் வாழ்த்து அதிகார விளக்கம் 002 வான் சிறப்பு அதிகார விளக்கம் 003 நீத்தார் பெருமை அதிகார விளக்கம் 004 அறன் வலியுறுத்தல் அதிகார விளக்கம் 005 இல்வாழ்க்கை-அதிகார விளக்கம் 039 இறைமாட்சி அதிகார விளக்கம் 040 கல்வி அதிகார விளக்கம் 041 கல்லாமை அதிகார விளக்கம் 042 கேள்வி அதிகார விளக்கம் 043 அறிவுடைமை அதிகார விளக்கம் 109 தகையணங்குறுத்தல் அதிகார விளக்கம் 110 குறிப்பறிதல் அதிகார விளக்கம் 111 புணர்ச்சி மகிழ்தல் அதிகார விளக்கம் 112 நலம்புனைந்துரைத்தல் அதிகார விளக்கம் 113 காதற்சிறப்பு உரைத்தல் அதிகார விளக்கம்
006 வாழ்க்கைத்துணை நலம்-அதிகார விளக்கம் 007 மக்கட்பேறு-அதிகார விளக்கம் 008 அன்புடைமை-அதிகார விளக்கம் 009 விருந்தோம்பல் அதிகார விளக்கம் 010 இனியவைகூறல் அதிகார விளக்கம் 044 குற்றங்கடிதல்-அதிகார விளக்கம் 045 பெரியாரைத் துணைக்கோடல்-அதிகார விளக்கம் 045 சிற்றினம் சேராமை-அதிகார விளக்கம் 047தெரிந்து செயல்வகை -அதிகார விளக்கம் 048வலியறிதல் -அதிகார விளக்கம் 114 நாணுத்துறவு உரைத்தல் அதிகார விளக்கம்
                    115 அலர் அறிவுறுத்தல் அதிகார விளக்கம்
                    116 பிரிவாற்றாமை அதிகார விளக்கம் 117 படர்மெலிந்து இரங்கல் அதிகார விளக்கம்
                    118 கண்விதுப்பு அழிதல் அதிகார விளக்கம்
0011 செய்ந்நன்றியறிதல் அதிகார விளக்கம் "012 நடுவுநிலைமை அதிகார விளக்கம் "013 அடக்கமுடைமை அதிகார விளக்கம் 014 ஒழுக்கமுடைமை -அதிகார விளக்கம் 015 பிறனில் விழையாமை -அதிகார விளக்கம் 049 காலமறிதல் -அதிகார விளக்கம்  050 இடனறிதல் -அதிகார விளக்கம் 051 தெரிந்து தெளிதல் -அதிகார விளக்கம் 052 தெரிந்து வினையாடல் -அதிகார விளக்கம் 053 சுற்றந்தழால் -அதிகார விளக்கம் 119 பசப்புறுபருவரல் -அதிகார விளக்கம் 120 தனிப்படர்மிகுதி -அதிகார விளக்கம் 121 நினைந்தவர்புலம்பல் -அதிகார விளக்கம் 122 கனவுநிலை உரைத்தல்-அதிகார விளக்கம் 123 பொழுதுகண்டிரங்கல்-அதிகார விளக்கம்
016 பொறையுடைமை அதிகார விளக்கம் 017 அழுக்காறாமை அதிகார விளக்கம் 018 வெஃகாமை அதிகார விளக்கம் 019 புறங்கூறாமை அதிகார விளக்கம் 058 பயனில சொல்லாமை அதிகார விளக்கம் 054 பொச்சாவாமை அதிகார விளக்கம் 055 செங்கோன்மை அதிகார விளக்கம் 056 கொடுங்கோன்மை அதிகார விளக்கம் 057 வெருவந்தசெய்யாமை அதிகார விளக்கம் 058 கண்ணோட்டம் அதிகார விளக்கம் 124 உறுப்புநலனழிதல் அதிகார விளக்கம் 125 நெஞ்சொடுகிளத்தல் அதிகார விளக்கம் 126 நிறையழிதல் அதிகார விளக்கம் 127 அவர்வயின் விதும்பல் அதிகார விளக்கம் 128 குறிப்பறிவுறுத்தல் அதிகார விளக்கம்
021 தீவினையச்சம்-அதிகார விளக்கம் 022 ஒப்புரவறிதல்-அதிகார விளக்கம் 023 ஈகை-அதிகார விளக்கம் 024 புகழ்-அதிகார விளக்கம்" 025 அருளுடைமை-அதிகார விளக்கம்" 059 ஒற்றாடல்-அதிகார விளக்கம் 060 ஊக்கமுடைமை-அதிகார விளக்கம் 061 மடியின்மை-அதிகார விளக்கம் 062 ஆள்வினையுடைமை-அதிகார விளக்கம் 063 இடுக்கணழியாமை-அதிகார விளக்கம் 129புணர்ச்சிவிதும்பல்-அதிகார விளக்கம் 130நெஞ்சோடுபுலத்தல்-அதிகார விளக்கம் 131புலவி-அதிகார விளக்கம் 132புலவி நுணுக்கம்-அதிகார விளக்கம் 133ஊடலுவகை-அதிகார விளக்கம்
026 புலால்மறுத்தல்-அதிகார விளக்கம் 027 தவம்-அதிகார விளக்கம் 028 கூடாஒழுக்கம்-அதிகார விளக்கம் 029 கள்ளாமை-அதிகார விளக்கம் 030 வாய்மை-அதிகார விளக்கம் 064 அமைச்சு-அதிகார விளக்கம் 065 சொல்வன்மை-அதிகார விளக்கம் 066 வினைத்தூய்மை-அதிகார விளக்கம் 067 வினைத்திட்பம்-அதிகார விளக்கம் 068 வினை செயல்வகை-அதிகார விளக்கம்
031 வெகுளாமை-அதிகார விளக்கம் 032 இன்னாசெய்யாமை-அதிகார விளக்கம் 033 கொல்லாமை-அதிகார விளக்கம் 034 நிலையாமை-அதிகார விளக்கம் 035 துறவு-அதிகார விளக்கம் 069 தூது-அதிகார விளக்கம் 070 மன்னரைச்சேர்ந்தொழுகல்-அதிகார விளக்கம் 071 குறிப்புஅறிதல்-அதிகார விளக்கம் 072 அவையறிதல்-அதிகார விளக்கம் 073 அவையஞ்சாமை-அதிகார விளக்கம்
036 மெய்யுணர்தல்-அதிகார விளக்கம் 037 அவாவறுத்தல்-அதிகார விளக்கம் 038 ஊழ்-அதிகார விளக்கம் 074 நாடு-அதிகார விளக்கம் 075 அரண்-அதிகார விளக்கம் 076 பொருள்செயல்வகை-அதிகார விளக்கம் 077 படைமாட்சி-அதிகார விளக்கம் 078 படைச்செருக்கு-அதிகார விளக்கம்
079 நட்பு-அதிகார விளக்கம் 080 நட்பாராய்தல்-அதிகார விளக்கம் 081 பழைமை-அதிகார விளக்கம் 082 தீநட்பு-அதிகார விளக்கம் 083 கூடாநட்பு-அதிகார விளக்கம்
084 பேதைமை-அதிகார விளக்கம் 085 புல்லறிவாண்மை-அதிகார விளக்கம் 086 இகல்-அதிகார விளக்கம் 087 பகைமாட்சி-அதிகார விளக்கம் 088 பகைத்திறம் தெரிதல்-அதிகார விளக்கம்
089 உட்பகை-அதிகார விளக்கம் 090 பெரியாரைப்பிழையாமை-அதிகார விளக்கம் 091 பெண்வழிச்சேறல்-அதிகார விளக்கம் 092 வரைவில் மகளிர்-அதிகார விளக்கம் 093 கள்ளுண்ணாமை-அதிகார விளக்கம்
094 சூது-அதிகார விளக்கம் 095 மருந்து-அதிகார விளக்கம் 096 குடிமை-அதிகார விளக்கம் 097 மானம்-அதிகார விளக்கம் 098 பெருமை-அதிகார விளக்கம்
099 சான்றாண்மை-அதிகார விளக்கம் 100 பண்புடைமை-அதிகார விளக்கம் 101 நன்றியில்செல்வம்-அதிகார விளக்கம் 102 நாணுடைமை-அதிகார விளக்கம் 103 குடிசெயல்வகை-அதிகார விளக்கம்
104 உழவு-அதிகார விளக்கம் 105 நல்குரவு-அதிகார விளக்கம் 106 இரவு-அதிகார விளக்கம் 107 இரவச்சம்-அதிகார விளக்கம் 108 கயமை-அதிகார விளக்கம்




இணையத்தில் உலா வருவோர் குறள் நல்கும் இலக்கிய இன்பத்தைத் துய்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டது இத்தளம்.

தோன்றிய காலம் தொட்டு எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்பட்ட ஒப்புயர்வற்ற தமிழ் நூல் திருக்குறள். புலவர் பெருமக்களும் அறிஞர்களும் தெய்வப் புலவர் என்று குறளாசிரியர் வள்ளுவரை வாழ்த்தி வணங்கினர். உலக இலக்கியங்களிலே குறள் போன்று அறிவு வளம் செறிந்த கருத்துக்களின் தொகுப்பு நூல் காண்பது அரிது என்று இக்கால சிந்தனையாளர்களாலும் பாராட்டுப்படும் பெருநூல் திருக்குறளாகும். பரந்துபட்ட வாழ்வியல் கருத்துக்களை தன்னுள்ளே அடக்கி நட்புணர்வோடு அவற்றை நமக்கு உணர்த்துகிறது குறள்.

இத்தளத்தின் நோக்கமும் இலக்கும்

அனைவரும் படித்து இன்புறும் வண்ணம், பெருமைக்குரிய பண்டைய தமிழ் இலக்கியங்களுக்கு உரைகள் பல வெளிவருகின்றன. தொடர்ந்து திறனாய்வு நூல்களும் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. எல்லாப் பொருளும் இதன்பால் உளதால் திருக்குறளுக்கு உரைநூல்களும் திறனாய்வு நூல்களும் இன்னும் பலவாகும். உரைகள் பல தோன்றியதால் குறள் கூறும் கருத்து என்ன என்று புரிந்து கொள்வதில் சில சமயங்களில் மயக்கமும் குழப்பமும் உண்டாகின்றன.

திருக்குறள் சொல்லும் உண்மையான கருத்துக்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் நாளும் பெருகி வருகிறது.
பரபரப்பான வாழ்க்கை முறை, மாறிவரும் கல்விமுறையின் நோக்கங்கள் இவை ஒருபுறம் பழம் இலக்கியங்களைப் படிக்கத் தடைகளாக இருக்க, மறுபுறம் ஊடகங்களின் வேகமான வளர்ச்சி, இணையதள தொழில்நுட்ப முன்னேற்றம் இவற்றால் இலக்கியங்களை எல்லாரும் எந்த நேரத்திலும் எளிதாக அறிந்து கொள்ள வாய்ப்புக்கள் மிகையாக உள்ளன. இன்றைய இணைய உலகில் குறளுக்குப் பலர் தளம் அமைத்துப் பெரும் பணி ஆற்றுகின்றனர். குறளோடு பதவுரை, பொழிப்புரை, விரிவுரை வழங்கும் இணைய தளங்கள் மிகையாகக் காணப்படுகின்றன. கல்வி நிறுவனங்களாலும் குறள் ஆர்வலர்களாலும் அமைக்கப்பட்ட பயனுள்ள தளங்கள் நிறைய உண்டு. வலைப்பூக்களும் மற்ற இலக்கியத் தளங்களும் திருக்குறளை ஆய்கின்றன.

நல்ல பல குறள் ஆய்வுக்கட்டுரைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இணையத்தில் பரவிக் கிடக்கின்றன.
அச்சிலிருப்பவை/ அச்சிலிருந்து மறைந்த பழைய பதிப்புகள் இவற்றில் விழுமிய ஆய்வுரைகள் அடங்கியுள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்தல் நல்ல பயன் தரும்.
திருக்குறளுக்கு உள்ள பழைய உரைகளைத் தொகுத்து, உரைவளம், உரைக்கொத்து, உரை வேற்றுமை, உரைக்களஞ்சியம் ஆகிய பயனுள்ள நூல்கள் வெளிவந்துள்ளன. உரையாசிரியர்கள் செய்த ஆய்வோடு இப்பதிப்பாசிரியர்களும் தங்கள் மேலான கருத்துரைகளுடன் குறளைத் திறன் செய்திருக்கிறார்கள்.
ஒரு நூலுக்கு திறனாய்வு நூல்கள் மேலும் அணி கூட்டும். மூலநூலின் குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் திறனாய்வுகள் மூலத்திற்குக் கூடுதல் பெருமை சேர்க்கும் பெற்றிமை கொண்டன. நல்ல திறனாய்வு நூல்கள் மூலநூலை மேலும் ஊன்றிப்படிக்க உற்சாகமூட்டக்கூடியனவுமாகும்.

ஒரு குறளுக்கமைந்த பல ஆய்வு உரைகளில் காணும் செய்திகளைத் தொகுத்து அவற்றுடன் இத்தளத்தின் கருத்துரையும் இணைத்து வழங்கப்படுகிறது.
இணையதள நுகர்வோரை இலக்காக வைத்து, வள்ளுவ உள்ளத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் குறள் திறனாய்வு செய்யப்படுகிறது. அவர்கள் குறளைச் சுவைத்து இன்புறவேண்டும் என்பதுடன் குறளின் பொருள் உணர்ந்து நூற்பயன் துய்த்து மேலும் பலரைப் படிக்கத்தூண்டவேண்டும் என்பதும் ஒரு நோக்கமாகும். திருக்குறள் சொல்கிற செய்திகளின் மேன்மையைப் பரவலாக்கும் குறிக்கோளுடனும் இத்தளம் செயல்படும்.

தள அமைப்பு

திறன் பக்கங்கள் ஒவ்வொன்றும் குறள், அதன் பொழிப்புரை (மு வ உரை) இவற்றுடன் தொடங்குகிறது.
அதன்பின் மூன்று உரைகள் கொடுக்கப்பட்டுள்ளன; மற்ற உரையாசிரியர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்கிய மணக்குடவர், ஆழ்ந்த ஆராய்ச்சித்திறன் கொண்ட பரிமேலழகர் ஆகியோர் உரைகள் அந்தந்தக் குறளுக்குத் தரப்பட்டுள்ளன. இன்றைய உரைகளில் வெவ்வேறு ஆசிரியர்கள் வரைந்தவை மூன்றாவதாக அமைகின்றன.
பின்னர் பொருளை எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் 'பொருள்கோள் வரி அமைப்பு' என்பதாக குறட்செய்யுளின் சீர்கள் மாற்றித் தொடுக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன.
அடுத்து குறள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விளக்க உரைகள் இடம்பெற்றுள்ளன; இரண்டாகப் பகுத்துப் படிப்பதில் நல்ல தெளிவு கிடைக்கும். நிறையுரையாக தொகுப்பு கூறப்பட்டுள்ளது. இறுதியில் அதிகார இயைபு கூறப்பட்டு பொழிப்பு இடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குறளுக்குமான திறன் பக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியலிலிருந்து விரும்பும் குறளுக்கான உரையைத் தேர்வு செய்து படிக்கலாம்.
அதுபோலவே ஒவ்வொரு அதிகாரத்திற்கும் விளக்கக் கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரவிளக்கப் பட்டியலிலிருந்து தேவையான அதிகாரவிளக்கக் கட்டுரையைத் தெரிவு செய்து படிக்க முடியும்.

இத்தளத்தில் பால்வகை, இயல்வகை, அதிகாரவகை, குறள்எண்வகையாக குறளையும் அதற்கான உரைகளையும் தேட முடியும்.

திருவள்ளுவர், திருக்குறள், அறம், பொருள், காமம், உரையாசிரியர்கள், திருவள்ளுவமாலை, குறளில் குறைகள்?, பாடவேறுபாடுகள், நறுஞ்செய்திகள் என்னும் தலைப்புக்களில் கட்டுரைகளும் உள.


கணிஞன்