இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |





அனைத்து அதிகார விளக்க உரை

12345678910...
அதிகாரம் எண்அதிகாரம்மணக்குடவர் - அதிகார உரைபரிமேலழகர் - அதிகார உரை
1கடவுள் வாழ்த்துகடவுள் வாழ்த்தாவது, கடவுளை வாழ்த்துதல்.[அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின், இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.]
2வான் சிறப்புவான் சிறப்பாவது மழையினது தலைமை கூறுதல். இது கடவுட் செய்கைத்தாதலான் அதன்பிற் கூறப்பட்டது. இஃதீண்டுக் கூறியதென்னையெனின், பின்னுரைக்கப்படுகின்ற இல்லறமும் துறவறமுமினிது நடப்பது மழையுண்டாயினென்றற்குப் போலும்; அன்றியும், காலத்தின் பொருட்டுக் கூறினாரெனினும் அமையும்.இன்பங்களும் நடத்தற்கு ஏதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]
3நீத்தார் பெருமை நீத்தார் பெருமையாவது, துறந்த முனிவரது பெருமையைக் கூறல். இது, கடவுளரை வணங்கினாற்போல் முனிவரையும் வணங்கவேண்டும் என்பதனாலும், அவர் அதை அடையத்தக்கவர் என்ற கருத்தினாலும், அவையிற்றின் பின் கூறப்பட்டது.[அஃதாவது ,முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல். அவ் அறமுதற்பொருள்களை உலகிற்கு உள்ளவாறு உணர்த்துவார் அவர் ஆகலின், இது வான் சிறப்பின்பின் வைக்கப்பட்டது.]
4அறன் வலியுறுத்தல்அறன் வலியுறுத்தலாவது அறன் வலிமையுடைத்து என்பதனை அறிவித்தல். இதனானே அறத்துப்பால் முற்கூறுதற்குக் காரணம் சொன்னாருமாம். இது மேற்கூறிய முனிவரால் கொண்டு உய்க்கப்படுதலின் பிற்கூறப்பட்டது.[அஃதாவது, அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். 'சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல'(புறநா.31) என்றார் பிறரும்.)
5இல்வாழ்க்கை அவற்றுள், இல்வாழ்க்கையாவது இல்லின்கண் இருந்து வாழ்வார் வாழும் திறன் கூறுதல்.மேல் அறஞ் செய்கவென்றார் இது முதலாக அறஞ் செய்யுமாறு கூறுகின்றாராதலின், இது பிற்கூறப்பட்டது.[அஃதாவது, இல்லாளோடு கூடி வாழ்தலினது சிறப்பு.இந்நிலை அறம் செய்தற்கு உரிய இருவகை நிலையுள் முதலது ஆதலின், இஃது அறன் வலியுறுத்தலின் பின் வைக்கப்பட்டது)
6வாழ்க்கைத் துணைநலம் வாழ்க்கைத் துணைநலமாவது வாழ்க்கைக்குத் துணையாகிய மனையாளது பெண்மை இலக்கணம் கூறுதல்.[அஃதாவது, அவ்வில்வாழ்க்கைக்குத் துணை ஆகிய இல்லாளது நன்மை. அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.)
7புதல்வரைப் பெறுதலபுதல்வரைப் பெறுதலாவது புதல்வரைப் பெற்றதனாலாய பயன் கூறுதல். [அஃதாவது, இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படுங் கடன் மூன்றனுள் முனிவர் கடன்கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின் ,அக்கடன் இறுத்தற்பொருட்டு நன்மக்களைப் பெறுதல்.அதிகார முறைமை மேலே பெறப்பட்டது.]
8அன்புடைமை அன்புடைமையாவது தன்னைச் சார்ந்தார்மாட்டுக் காதலுடையவன் ஆதல்.[அஃதாவது, அவ் வாழ்க்கைத்துணையும் புதல்வரும் முதலிய தொடர்புடையார்கண் காதலுடையன் ஆதல்.அதிகார முறைமையும் இதனானே விளங்கும். இல்லறம் இனிது நடத்தலும், பிற உயிர்கள்மேல் அருள்பிறத்தலும் அன்பின் பயன் ஆகலின் , இது வேண்டப்பட்டது. வாழ்க்கைத்துணை மேல் அன்பு இல்வழி இல்லறம் இனிது நடவாமை 'அறவோர்க்கு அளித்தலும் , அந்தணர் ஓம்பலும், துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை' (சிலப்.16,71-73) என்பதனானும்,அதனான் 'அருள்பிறத்தல் அருள் என்னும் அன்பு ஈன் குழவி' (குறள்.757) என்பதனாலும் அறிக.)
9விருந்தோம்பல் விருந்தோம்பலாவது உண்ணுங் காலத்துப் புதியார் வந்தால் பகுத்துண்ண வேண்டும் என்பது கூறல். [அஃதாவது, இரு வகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் கட்புலனாகாதாரை நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் பிறர்க்கு ஈதல் அன்மையானும், இடைநின்ற விருந்து ஓம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்கட்கு முதல் ஆயிற்று. வேறாகாத அன்புடை இருவர் கூடியல்லது செய்யப்படாமையின், இஃது அன்புடைமையின்பின் வைக்கப்பட்டது.)
10இனியவை கூறல் இனியவை கூறலாவது கேட்டார்க்கு மனமகிழும் சொற்களைக் கூறுதல். [அஃதாவது, மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல். இதுவும், விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதது ஆகலின், விருந்தோம்புதலின்பின் வைக்கப்பட்டது.)
12345678910...