எழுத்தாலும், சொல்லாலும், தொடராலும் வேறுபடும் பாடம் அமைந்த குறள்களும் சில உள.
‘அஞ்சுவதோரு மறனே’ (366) என்பதற்கு ‘அறிவே’ என நச்சரும் ‘அவாவே’ எனத் தாமத்தரும்,
‘அறம் பொருளின்பம் உயிரச்சம்’ (501) என்பதற்கு ‘உயிரெச்சம்’ எனக் காலிங்கரும்,
‘ஒற்றுமுரை சான்ற’ (581) என்பதற்கு ‘ஒற்றும் முறை சான்ற’ என மணக்குடவரும்,
‘விழை தகையான் வேண்டியிருப்பர்’ (581) என்பதற்கு ‘விழை தகையால் வேண்டியிருப்பர்’ எனக் காலிங்கரும்
பாடங் கொள்வதால் இவர் தம் உரைகள் பரிமேலழகர் உரையினும் வேறுபடுகின்றன.
இங்ஙனமே பரிமேலழகர் கொண்ட பாடங்கட்கு வேறாகப்
‘பகல் கருதிப் பற்றார் செயினும்’ (252),
'இறப்போர் இருந்த தொழிற்றாம்’ (977),
‘உழுவார் உலகத்தார்க்காணி அஃதற்றார் தொழுவாரே எல்லாம் பொறுத்து’ (1031)
‘தோட்டாழ் கதுப்பினாள்தோள்’ (1105)
என மணக்குடவர் வேறுபாடமோதுவார்.
‘ஏந்திய கொள்கையார் சீறின்’ (899)
‘அற்ற மறைக்கும் சிறுமை பெருமைதான் குற்றமாக் கொண்டுவிடும்’ (980)
‘எண்பதத்தான் எய்தல் எளிதென்ப’ (991)
‘பல்குடை நிழலும் த்ங்கொடைக் கீழ்க்காண்பர்’ (1034)
‘செல்லான் கிழவனிருப்பின் நிலமடந்தை புல்லாள் புரள் விடும்’ (1039)
’துறைவன் துறந்தமை தேற்றாகொல்’ (1157)
‘கூடிய காலம் பிரிந்தார்’ (1264)
எனக் காலிங்கர் பரிமேலழகர் பாடத்தினும் வேறு பாடங் கொள்வர்.
‘தானைக் கண் டன்ன துடைத்து’ (1082)
என்பது பரிதி கொண்ட வேறு பாடம்.