குறளில் புதைந்துள்ள சுவையான புள்ளிகள்:
|
|
- ரஷ்ய நாட்டுக் கிரெம்ளின் மாளிகையில் அமைந்துள்ள அணுவும் துளைக்க முடியாத சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த
நூல்கள் சிலவற்றுள் திருக்குறளும் ஒன்றாகும்.
- பைபிளுக்கு அடுத்தபடியாக உலக மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப் பெற்ற நூல் குறள்.
- 1796-இல் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய ஃபிரன்சிஸ் வைட் எல்லிஸ் (18-10-1819)என்ற குறள் பற்றாளர் வள்ளுவர் உருவமும், ஐந்துமுனை
நட்சத்திரமும் பொறித்த 'இரட்டை வராக-நட்சத்திர பகோடர்' தங்கக் காசுகளை வெளியிட ஏற்பாடு செய்தார் (அவை புழக்கத்திற்கு விடப்பட்டனவா என்பதற்கு
இப்பொழுது ஆதாரம் கிடைக்கவில்லை). அக்காசுகளில் இரண்டு லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும் இரண்டு கொல்கத்தாவிலுள்ள இந்திய
அருங்காட்சியகத்திலும் உள்ளன.
- எல்லீஸ் 1831-ஆம் ஆண்டு முதலில் குறளை அச்சிட்டார்.
|
- 'தமிழ்' என்னும் சொல்லில் ழகரமாகிய தமிழ்ச் சிறப்பெழுத்து ஒன்று அமைந்திருப்பது போலக் 'குறள்' என்பதில் றகரமாகிய சிறப்பெழுத்து
அமைந்திருக்கின்றது.
- முதற்குறள் தமிழில் முதல் எழுத்தாகிய 'அ' என்னும் உயிரெழுத்தில் தொடங்கி இறுதி எழுத்தான 'ன்' என்னும் மெய்யெழுத்துடன் கடைசிப்
பாடலில் முடிகிறது.
|
- ஒருமுறை பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்கள்: வீ, ங.
- அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து: 'ன்' -1750 முறை
- பயன்படுத்தாத எழுத்துக்கள்:
ஒள, ஙி, ஙீ, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙொள, செள, ஞி, ஞீ, ஞை, ஞொ, ஞோ, ஞெள, டெள, ணெள,
தெள, நை, நெள, பெள, மெள, யெள, ரெள, லெள, வெள, ழூ, ழெ, ழே, ழோ, ழெள, ளோ,ளெள, றெள, னெள,
ழூ, ழெ, ழே, ழோ, ழெள, ளோ,ளெள,றெள, னெள.
- துணை எழுத்தே இல்லாத குறள்
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (குறள்391)
|
- வெஃகாமை அதிகாரத்தில் அதிகாரத் தலைப்பையும் சேர்த்து 14 இடங்களில் ஆயுத எழுத்து இடம் பெற்றுள்ளது.
|
- குறளில் உள்ள மொத்தச் சொற்கள் 11597. அவைகளில் 4888 வெவ்வேறானவை; இன்னொரு வகையில் சொல்வதானால், ஒரு சொல் சராசரியாக
இரண்டுக்கு மேற்பட்ட தடவை குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
|
- நூல் முழுமையும் ஐம்பது அல்லது அறுபது வடமொழிச் சொற்களே உள.
|
- குறட்பா 1159 மட்டும் ஈற்றுச் சீரில் ஒரே ஒரு எழுத்தைக் கொண்ட 'தீ' என்னும் சொல்லுடன் முடிந்துள்ளது. அதுவும் அசைச் சொல்லாக இல்லாமல்
பொருட்பெயராக அமைந்துள்ளது:
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ
|
- தொடங்கிய சொற்களாலேயே முடித்திருப்பது இரண்டு பாக்கள்:
1.
நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல
நாட வளம்தரு நாடு (குறள் 739)
2.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள் (குறள் 751)
- முப்பால் எனவும் சொல்லப்படும் திருக்குறளில் அறம், பொருள், இன்பம் எனும் மூன்று சொற்களும் ஒரே பாடலில் இடம் பெற்றுள்ள குறள்:
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள் (குறள் 754)
-
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் 350)
என்ற குறளில் ஒரே சொல் 6முறை இடம் பெற்றுள்ளது.
-
ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே சொல் 4முறை 22 குறட்பாக்களிலும், ஒரே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.
|
- கடவுள் வாழ்த்து, கூடாஒழுக்கம், வினைத்தூய்மை, என்ற அதிகாரங்களில் எந்தப் பாடல்களிலும் அதிகாரப் பெயர் இடம் பெறவில்லை.
- வெஃகாமை என்னும் அதிகாரம் ஒன்றில் மட்டுமே அதிகாரப் பெயரைச் சுட்டும் பெயர் அதிலுள்ள பத்துப் பாக்களிலும் பயின்று வந்துள்ளது.
- 71, 110 ஆகிய அதிகாரங்கள் 'குறிப்பறிதல்' என்ற பெயரில் உள்ளன. எனவே 133 அதிகாரங்களுக்கு 132 பெயர்களே உள்ளன.
|
|
- உதடு ஒட்டாது பாடும் குறட்பாக்கள் கீழ் வருவன:
208, 240, 286, 310. 341, 419, 427, 472, 489, 516, 523, 678
679, 894, 1080, 1082, 1177, 1179, 1211, 1213, 1219, 1236, 1286, 1296.
|
- கி மு 31-ல் திருவள்ளுவர் ஆண்டு தொடங்குவதாக தமிழ் அறிஞர் கொள்வர்.
|
|
- ஒரே ஈற்றடி இரண்டு குறட்பாக்களில் அமைந்தவாறு ஐந்து இடங்களில் வருகின்றன:
"மெய்ப்பொருள் காண்பது அறிவு" (குறள்கள் 355-423)
"கோடாமை சான்றோர்க்கு அணி" (குறள்கள் 115-118)
"தேரினும் அஃதே துணை" (குறள்கள் 132-242)
"செய்யாமை மாசற்றோர் கோள்" (குறள்கள் 311-312)
"தொல்கவின் வாடிய தோள்" (குறள்கள் 1234-1235) .
|
- ஈற்றடியில் மூன்று சீர்களின் கூட்டுத் தொகையாக ஏழு எழுத்துக்களே கொண்ட குறட்பாக்கள் இரண்டு:
1. ஆகுல நீர பிற (குறள் 34)
2. காதலை வாழி மதி (குறள் 1118)
|
குறளில் எண்கள்:
- குறளில் மிகவும் பயன்படுத்தப்பட்ட எண் '1' தான் (47 முறை). குறளில் கூறப்படாத எண்: 9. பழந்தமிழ் மரபில் 9 என்ற
எண்ணைத் தொண்டு என்ற சொல்லால் குறிப்பிடுவர். ஆயினும் தொண்டு, தொண்பது போன்ற சொல்லாட்சி கூட குறளில் காணப்பெறவில்லை.
|